search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி விழா"

    • கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர்.
    • கலை நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டில் புதியதாக சேர்ந்த மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டம் என குதுகலத்துடன் நடனம் ஆடினர்.

    தெலுங்கானா மாநிலம், கங்காதர மண்டலம், வெங்காய பள்ளியை சேர்ந்தவர் பிரதீப்தி (வயது 17). இவர் நியல கொண்ட பள்ளியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் படித்து வந்தார்.

    கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர்.

    கலை நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டில் புதியதாக சேர்ந்த மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டம் என குதுகலத்துடன் நடனம் ஆடினர்.

    அப்போது பிரதீப்தாவும் சக மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியை மீட்டு கரீம் நகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரதீப்தி பரிதாபமாக இறந்தார்.

    கல்லூரியில் நடனம் ஆடிய போது மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    மதுரை

    மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் 29-வது விளையாட்டு போட்டி நடந்தது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, கல்லூரி செயலாளர் கரிக்கோல்ராஜ், பொரு ளாளர் ஏ.சி.சி. பாண்டியன், தாளாளர் ஜெயகுமார், தலைவர் மாரிஸ்குமார், முதல்வர் கார்த்திகாராணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி பேசுகையில், 'பெண்கள் பாதுகாப்பு, சமூக ஊட கங்களில் பெண்களின் அணுகுமுறை மற்றும் ஆன்லைன் குற்றங்கள்' குறித்து எடுத்து ரைத்தார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், இன்ஸ்பெக்டர் தங்கமணி ஆகியோர் பதக்கம், பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    2-வது முறையாக பினராய் விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார். கேரளாவில் பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் முதல்-மந்திரி பினராய் விஜயன் செல்லும் பாதையில் கறுப்பு சட்டை அணிந்து செல்லும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இந்நிலையில் கோழிக்கோட்டில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவிற்கு கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு கலரில் மாஸ்க் அணிந்து சென்ற மாணவர்களை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கேரளாவில் முதல்-மந்திரி செல்லும் பாதையில் கருப்பு சட்டை அணிந்து செல்வோரை போலீசார் தடுத்து நிறுத்துவதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    • சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மூன்று பேரும் அமைதியாகி உள்ளனர்.
    • கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி சஸ்பெண்டு செய்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பல கல்லூரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், பலரும் தங்களுக்கு பிடித்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து, கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் இருந்த 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பினர்.

    இதனை பார்த்த, மற்ற மாணவ மாணவியர் திகைத்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிறுத்தும்படி கூறினர். அதன்பின்பு, அவர்கள் அமைதியாகி உள்ளனர்.

    இந்த காட்சிகளை மற்றொரு மாணவர் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ வைரலானது. இதுபற்றி கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மூன்று பேரையும் சஸ்பெண்டு செய்துள்ளது. அதன்பின்னர் போலீசார் விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

    • அடிப்படை எழுத்தறிவு பயிற்சியை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் மூலம் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்தரத்தில் மிகவும் குறைந்து இருந்தது. இப்பொழுது மாவட்டத்தின் வளர்ச்சி, கல்வியறிவு என அனைத்திலும் முதலிடம் பெறுவதற்கு முதலமைச்சர் வேண்டிய வசதிகளை செய்து தருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதை நிவர்த்தி செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு என ரூ.587 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தவர்கள், அப்படி என்றால் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பிலாமல் வேலைக்கு செல்பவர்கள், கிராமப்பகுதிகளில் உள்ள எழுத படிக்க தெரியாத பெரியவர்கள் என உள்ள அனைவருக்கும் எழுத படிக்க சொல்லி கொடுத்து அவர்களது பெயரை கூட கையொப்பம் இடும் அளவிற்கு படிக்க சொல்லி கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    கடந்த ஆண்டு சுமார் 3.10 லட்சம் பேருக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் என இலக்கும் அதற்கான பயிற்சியையும் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இன்றைக்கு எங்களது முழு முயற்சியின் காரணமாக 3.10 லட்சம் பேரில் இருந்து 3.19 லட்சம் பேருக்கு எழுத படிக்க சொல்லி கொடுத்து உயர்த்திக் காட்டி உள்ளோம்.

    இதுபோன்ற தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிசாரா குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கான இந்த பயிற்சியை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் குப்புசாமி, இணை இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திசைவீரன், திருப்புல்லாணி ஒன்றியக் குழுத்தலைவர் புல்லாணி, மாயாகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல்லில் நடைபெற்ற கல்லூரி விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்றார்.
    • பெண்கள் தலைமையில் உள்ள வீடு மற்றும் நாடு வளம்பெரும் என அவர் பேசினார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசியதாவது:-

    பெண்கள் பொருளா தாரத்தில் உயர்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும். பெண்கள் தலைமையில் இருக்கும் வீடு எவ்வாறு சிறப்பாக இருக்குமோ அதே போல பெண்கள் தலைமையில் செயல்படும் நாடும் சிறப்பாக இருக்கும். அதற்காக ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குரிய தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    துறை சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து நேர்மையாக சம்பாதிப்பது எவ்வாறு முக்கியமோ அதே போல நடைமுறைக் கல்வியும் அவசியமாகும். மாணவ-மாணவிகளாகிய நீங்கள் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செல்லும் போது தமிழ்மொழியை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தி மட்டுமே வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு செய்து விடும். செய்தித்தாள்கள் படிப்பதை தினசரி வாடிக்கையாக வைத்துக் கொண்டால் தேசத்தின் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும் மதத்தின் அடிப்படை வாதிகள் பெண்கள் வளர்ச்சிக்கு எப்போதும் தடை போடுவார்கள். எனவே அது போன்ற நபர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    நம் மனம் எப்போதும் 2 விதமான எண்ணங்களை தேடிப்பார்க்கும். ஆனால் நாம் ஒன்றில் தெளிவான முடிவை எடுத்து தேர்வு செய்ய வேண்டும். படிப்பு, வேலை, பொருளாதாரம் இவை சார்ந்து நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ஜாதிய உணர்வுகள் வளராது. இவ்வாறு அவர் பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    மதுரை சேர்மத்தாய்வாசன் கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப தினவிழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் பேசினார்.
    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் உள்ள நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப தினம் மற்றும் நூதன அடைவு மைய தொடக்க விழா நடந்தது. 

    கல்லூரி தலைவர் மாரீஸ்குமார், செயலாளர் கரிக்கோல்ராஜ், பொருளாளர் நல்லதம்பி ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த விஞ்ஞானி டாக்டர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முதல்வர் கார்த்திகாராணி வரவேற்றார். 

    சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.சிவன் கலந்து கொண்டு புதிய மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி நூலக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    நவீன உலகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதிக்க தொடங்கி விட்டனர். ஒரு துறை மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களின் சாதனை அதிகரித்து வருகிறது. 

    பெண்களால் ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய முடியும். அந்த அளவுக்கு பெண்களுக்கு திறமை இருக்கிறது. பெண்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் முடியாது என்ற பதிலை கேட்க முடியாது. 

    முடியாததை கூட முடிக்கும் திறமை பெண்களிடம் இருக்கிறது. அவர்களிடம் தலைமைத்துவ பண்பு அதிகம் உள்ளது. பெண்கள் எதையும் பார்த்து பயப்படக்கூடாது. முயற்சி இருந்தால் கிராமப்புற பெண்களால் கூட எல்லாத்துறைகளிலும் சாதிக்க முடியும். 

    காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வேளாண்மை மற்றும் விண்வெளி துறையிலும் பெண்கள் அதிகம் சாதிக்க வேண்டும். புதிய, புதிய கண்டுபிடிப்புகளை அவர்கள் உருவாக்க வேண்டும். இது தொழில்நுட்பம் நிறைந்த உலகம் என்பதால்  அனைவரும் தொழில் நுட்பத்தை நன்றாக கற்றுக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு அதனை பயன்படுத்த வேண்டும். 

    கிராமப்புற மாணவி களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கல்லூரியில் பல திறமைகள் கொண்ட மாணவிகள் உருவாக வேண்டும். திறமைகளின் உறைவிடமே நமது பாரதம். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    முன்னதாக பாரா பேட்மிண்டன் போட்டியில் சர்வதேச அளவில் சாதித்த மதுரை மாணவி ஜெர்லின் அனிகாவை டாக்டர் கே.சிவன் பாராட்டி முதல் பரிசு வழங்கினார். அந்த மாணவிக்கு பல்வேறு அமைப்பின் சார்பில் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. 

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். இயற்பியல்துறை தலைவி கவிதா நன்றி கூறினார்.
    ×